மற்றுமொரு கொடூர படுகொலை -இவர்களைத் தெரியுமா...!
வர்த்தகர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவரும் மூவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடி நிற்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி மிதிகம பிரதேசத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே குறித்த மூவரையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
மேலும் மூவர் தொடர்பிலான தகவல்கள்
சம்பவம் தொடர்பில் மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நான்கு சந்தேக நபர்களை கைது செய்ததுடன், குற்றச் செயலுக்காக பயன்படுத்தப்பட்ட காரையும் கண்டுபிடித்தனர்.
மேலதிக விசாரணைகளில் இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பேர் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேக நபர்களை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்.

