நாட்டை வந்தடைந்துள்ள மற்றுமொரு நிலக்கரி கப்பல்..!
Sri Lanka Economic Crisis
Economy of Sri Lanka
By Kiruththikan
இலங்கைக்கு மற்றுமொரு நிலக்கரி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக, இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பலில் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இன்றையதினம் அதனை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
அதற்கமைய, நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை இடையூறின்றி முன்னெடுத்துச் செல்ல முடியும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டை வந்தடையவுள்ள 04 கப்பல்கள்
எதிர்வரும் டிசம்பர் மாதம் 04ஆம் திகதிக்கு முன்னர் குறித்த நிறுவனத்தின் மேலும் 04 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.
இதேவேளை, நிலக்கரி கொள்வனவு செய்வதற்கான புதிய விநியோகஸ்தர் தெரிவு தொடர்பான ஒப்பந்ததாரருக்கான விண்ணப்ப காலம் நேற்றுடன்(25) முடிவடைந்ததாக இலங்கை நிலக்கரி நிறுவனம் அறிவித்துள்ளது.
மரண அறிவித்தல்