சாமர சம்பத்துக்கு மரண தண்டனை என்பதே முக்கிய செய்தி!
மரண தண்டனையை கொண்டுவந்து சாமர சம்பத்தை தூக்கிலிடுவோம் என்று அரசாங்கம் கூறினால் அதுவே செய்தியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
சாமர சம்பத்துக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால் இது செய்தியல்ல என்றும் அவர் விளக்கியுள்ளார்.
இது தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கருத்து தெரிவித்த அவர், என்னை கொன்றாலும், சுட்டுபோட்டாலும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளை கடுமையாக விமர்சிப்பேன்.
மக்களின் பிரச்சினை
எவருக்கும் அடிபணிய போவதில்லை. மக்களின் பிரச்சினைகளை எந்தவித பயமும் இன்றி நாங்கள் வெளியிடுவோம். இப்போது கல்வித்துறையில் பல்வேறு பிரச்சினைகள் நிலவுகின்றன.

பிரதமருக்கு கல்வி அமைச்சை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாவிடின் அவருக்கு பிறிதொரு அமைச்சு பதவியை வழங்குங்கள். தேசியப் பட்டியல் இருக்கின்றது.
சிறந்த கல்விமான்களை அதில் இணைக்கலாம். கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்றால் கல்வி அமைச்சரை மாற்றுங்கள்” என கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |