சிறையிலிருந்த கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி
Trincomalee
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Prisons in Sri Lanka
By Dilakshan
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொட கஸ்ஸப தேரர் வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நோய் நிலைமை
சமீபத்தில் திருகோணமலை சம்புத்த ஜெயந்தி விஹாரையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர், நான்கு பிக்குகள் மற்றும் ஆறு சந்தேக நபர்களுடன், 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கஸ்ஸப தேரருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக இரத்த பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதாக என்று சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்