இலங்கையின் பாதுகாப்புக்காக துருக்கிய ட்ரோன்கள்!
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளின் ஒரு பகுதியாக, துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை விற்க அந்நாடு முன்வந்துள்ளதாக தூதுவர் செமி லுட்ஃபு துர்குட் தெரிவித்துள்ளார்.
பாத்ஃபைண்டர் அறக்கட்டளை ஏற்பாடு செய்த சமீபத்திய சந்திப்பின் போது, பாதுகாப்பு கொள்முதல் என்பது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும் என தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
கடல்சார் கண்காணிப்பு
இதன்படி, இலங்கை இராணுவம் கடல்சார் கண்காணிப்பு போன்ற நோக்கங்களுக்காக துருக்கிய ட்ரோன்களைப் பயன்படுத்தலாம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளிடம் இதை முன்மொழிந்ததாகவும், ஆனால் இன்னும் எதுவும் இறுதி செய்யப்படவில்லை எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
துருக்கிய போர்க்கப்பலான TCG Büyükada ஜூன் 2025 இல் இலங்கைக்கு விஜயம் செய்து, சட்டவிரோத கடத்தலை எதிர்த்துப் போராடுவது மற்றும் பாதுகாப்பான கடல் பாதைகளை உறுதி செய்வது உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பில் கூட்டு முயற்சிகளை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |