வவுனியாவில் போக்குவரத்து காவல்துறையினர் மீது மோதிய லொறியின் சாரதி கைது!

Sri Lanka Police Sri Lanka Arrest
By Kanooshiya Jan 24, 2026 06:36 AM GMT
Report

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறியின் சாரதி இன்று (24.01.2026) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டளையை மீறி பயணித்த சிறிய ரக லொறி ஒன்றை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இருவர் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த லொறியின் சாரதி பின்தொடர்ந்து வந்த காவல்துறை அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பேருந்து சாரதிகள்!

போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பேருந்து சாரதிகள்!

காணொளி

இவ்வாறு போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பின்தொடர்ந்து வந்த மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளனர்.

வவுனியாவில் போக்குவரத்து காவல்துறையினர் மீது மோதிய லொறியின் சாரதி கைது! | Lorry Driver Hitting Traffic Police In Vavuniya

மோட்டார் சைக்கிள் மீது குறித்த லொறி மோதும் காட்சிகள் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது.

லொறியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டமையினால், லொறியை வீதியில் கைவிட்டு சாரதி அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில், இராணுவத்தினர் அவரைக் கைது செய்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இரு காவல்துறை அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் லொறியையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் இரட்டை பெரியகுளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சாமர சம்பத்துக்கு மரண தண்டனை என்பதே முக்கிய செய்தி!

சாமர சம்பத்துக்கு மரண தண்டனை என்பதே முக்கிய செய்தி!

தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்...! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு

தீவிர அரசியலில் இருந்து விலகும் ரணில்...! மகாநாயக்கர்களை சந்தித்த பின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024