கடும் மன அழுத்தத்தால் விபரீத முடிவிற்கு முயன்ற ஞானசாரதேரர்
சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு, கலகொட அத்தே ஞானசார தேரர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தான் எதிர்கொண்ட நெருக்கடியின் காரணமாகத் தனது உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் எண்ணம் குறித்து ஓர் அமைச்சரிடம் தெரிவித்திருந்ததாகவும் திட்டகல்ல ஆனந்தசிறி தேரர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்படுவதற்கு சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு ஞானசார தேரர் தனது 'நாமயை பஹா' என்ற நூலை வெளியிட்ட நிகழ்வை நினைவு கூர்ந்த ஆனந்தசிறி தேரர், தனது தாயார் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த சூழலில், தனக்காகத் தலையிடுமாறு திரிணிக மகாநாயக்க தேரோக்களிடம் மன்றாடியதாகக் கூறினார்.
மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பால் ஏற்பட்ட நிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பில் ஏற்பட்ட நடைமுறைப் பிழைகளின் காரணமாகவே இத்தகைய கதியை சந்திக்க நேர்ந்ததாகவும், அதனால் தான் கடும் அதிர்ச்சியிலும் மன அழுத்தத்திலும் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றியபோது தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this