இலங்கையில் உருவாகப்போகும் மற்றுமொரு கொரோனா கொத்தணி !
Srilanka
Corona
By Mkkamshan
இலங்கையில் ’பண்டிகை கொத்தணி’என்ற கொரோனா கொத்தணி உருவாகக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பண்டிகை காலங்களில் பொது மக்கள் கட்டுப்பாடின்றி செயற்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக அமையலாம் எனவும், தற்போதுள்ள சாதாரண வாழ்க்கை நிலை பாதிக்கப்படலாம் என தெரிவித்தார்.
நாட்டில் கொரோனா பரவல் நிலைமை தற்போது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றமையால், அதனை தொடர்ந்தும் பேணும் வகையில் எதிர்வரும் பண்டிகை காலங்களில் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுமாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதுபோன்ற ஒரு நிலை ஏற்படாமல் தடுப்பதற்கு பொது மக்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்