முல்லைத்தீவில் உயிரிழந்த மற்றுமொரு யானை : விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்!
முல்லைத்தீவில் மின்சார வேலியில் சிக்குண்ட கொம்பன் யானை ஒன்று உயிரிழந்துள்ளது.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில் வயல் நிலத்துக்கு பாதுகாப்புக்காக போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி இந்த யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில் சுமார் 15 வயது மதிக்கத்தக்க யானை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானையின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள்
யானையின் உயிரிழப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதையடுத்து, மின்சார வேலியினை இணைப்புச் செய்த காணியின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அச்சுறுத்தல்
இதேவேளை, சாளம்பன் கிராமத்தில் காட்டு யானையினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
தங்கள் கிராமத்துக்கான யானை வேலி இதுவரை அமைத்துக் கொடுக்கப்படவில்லை எனவும் இதனால் தொடர்ச்சியாக விவசாய நிலங்கள் அளிக்கப்பட்டு வருவதாகவும் யானையால் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறித்த பகுதியில் உள்ள விவசாயிகளும் மக்களும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |