பாபா வாங்காவின் மற்றுமொரு அச்சம் தரும் கணிப்பு - இருளில் மூழ்கப்போகும் உலகம்
எதிர்காலத்தில் நடக்கவுள்ள பேரழிவுகள் மற்றும் உலக ஒழுங்குமுறையில் ஏற்படவுள்ள மாற்றங்களை கணித்து அதில் சில விடயங்கள் நடக்கவும் காரணமாக இருந்ததால் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்காவின் கணிப்புகளை பலரும் ஆச்சரியத்துடன் உற்று நோக்குகின்றனர்.
அந்த வகையில் அவரின் மற்றுமொரு கணிப்பும் அச்சம் தருவதாகவே அமைந்துள்ளது.
முழுமையாக இருளில் மூழ்கும் உலகம்
அதாவது எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு உலகம் முழுமையாக இருளில் மூழ்கும் எனவும் பெரிய நாடொன்று உயிரியல் ஆயுதங்களால் மக்களை தாக்கும் எனவும் சூரிய புயல் அல்லது சூரிய சுனாமி ஏற்படும், இது கிரகத்தின் காந்த கவசத்தை கடுமையாக சேதப்படுத்தும் எனவும் கணித்துள்ளமையே அச்சத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாகும்.
அத்துடன் வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்ஸ்) பூமியைத் தாக்கலாம் மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் அதில் இறக்க நேரிடும். அணுமின் நிலையத்தில் ஒரு வெடிப்பு ஏற்படலாம், இதன் காரணமாக நச்சு மேகங்கள் ஆசியா கண்டத்தை மூடிவிடும். இதன் விளைவாக பல நாடுகள் கடுமையான நோய்களால் பாதிக்கப்படும். 2023-க்குள் மனிதர்கள் ஆய்வகங்களில் பிறப்பார்கள். இங்கிருந்து மக்களின் தன்மை மற்றும் தோலின் நிறம் தீர்மானிக்கப்படும். இதன் பொருள் என்னவெனில் பிறப்பு செயல்முறை முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என கணித்துள்ளார்.
நூறு வயதைக் கடக்கும் மக்கள்
இந்த நிலையில், இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கவிருக்கும் சம்பவங்கள் தொடர்பிலும் அவரின் கணிப்புகள் வெளியாகியுள்ளது. நூறு வயதைக் கடக்கும் மக்கள் 2046 காலகட்டத்திற்கு பின்னர் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு மக்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக உயிருடன் வாழ்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
2100க்கு பின்னர் பூமியில் இரவு நேரம் என்பதே இருக்காது எனவும், இரவை பகலாக்கும் செயற்கை சூரியன் உருவாக்கப்படும் எனவும் அவர் கணித்துள்ளார்.
மேலும், பூமியின் சுற்றுப்பாதை 2023ல் மாறும் என்றும் விண்வெளி வீரர்கள் 2028ல் வீனஸுக்கு பயணம் மேற்கொள்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.
உலகம் 5079 காலகட்டத்தில் பேரழிவால் முடிவுக்கு வந்துவிடும் எனவும் பாபா வங்கா கணித்துள்ளார்.