ஏடன் வளைகுடாவில் இஸ்ரேலின் மற்றுமொரு கப்பல் கடத்தப்பட்டது
Israel
Yemen
Israel-Hamas War
By Sumithiran
இஸ்ரேலியருக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் இரசாயனக் கப்பல் ஏடன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்தபோது இன்ந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்ட்ரல் பார்க் என்ற பெயர் கொண்ட அந்தக் கப்பல், சர்வதேச கப்பல் மேலாண்மை நிறுவனமான சோடியாக் மரைடைம் மூலமாக நிர்வகிக்கப்படுவதுடன் சுமார் 20 ஆயிரம் தொன் பாஸ்போரிக் அமிலத்தை ஏற்றிச் சென்றதாகத் தெரிகிறது.
அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்தியவர்களால்
இந்நிலையில் ஏடன் வளைகுடா வழியாகச் சென்ற இந்தக் கப்பல் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்தியவர்களால் கடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள்
இந்தக் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட பாஸ்போரிக் அமிலம், உரங்கள் தயாரிக்கப் பயன்படும் என்றும், கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் இருந்தாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்