உக்ரைன் படையினர் அதிரடி -மற்றுமொரு ரஷ்ய உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது( காணொலி)
russia
ukraine
helicopter
shotdown
By Sumithiran
உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தும் தரைப்பிரிவுக்கு பாதுகாப்பை வழங்கி தாக்குதலை மேற்கொண்டுவரும் ரஷ்யாவின் மற்றுமொரு உலங்கு வானூர்தியை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இன்று பத்தாவது நாளாகவும் தொடர்ந்ந வண்ணமுள்ளது.
இந்த நிலையில் உக்ரைன் ஆயுதப்படையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலியில், ரஷ்யாவின் மற்றுமொரு உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது.
அந்த காட்சியில் ரஷ்யாவின் உலங்கு வானூரதி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்து உக்ரைனுக்கு மகிமை உண்டாகட்டும் என பதிவிடப்பட்டுள்ளது.
Ласкаво просимо до пекла!??? pic.twitter.com/khIV6UtM60
— ВОЇНИ УКРАЇНИ?? (@ArmedForcesUkr) March 5, 2022

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி