திலினி பிரியமாலியின் மற்றுமொரு மோசடி அம்பலம்
பலரிடம் பணம் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு கட்டடமான கிறிஸ் பில்டிங்கில் வீடுகளை பெற்று தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்துள்ளமையும் அம்பலத்திற்கு வந்துள்ளது.
சந்தேக நபர் பலருடன் இணைந்து அங்கு அலுவலகம் நடத்தி இந்த மோசடியை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வருட சிசிடிவி தரவை பெற்ற காவல்துறை

சந்தேக நபரை சந்திப்பதற்காக அலுவலகத்திற்கு வந்தவர்கள், சந்தேக நபருடன் அலுவலகத்தில் இருந்தவர்கள் மற்றும் எந்தெந்த வாடிக்கையாளர்கள் யார் என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் சுமார் ஒரு வருடகால சிசிடிவி தரவுகளை பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேக நபர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போதைப்பொருள் வியாபாரிகளுக்கு பணம் வழங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க

சந்தேகநபர் தம்மிடம் உள்ள கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க முதலீட்டிற்காக பணம் வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக சட்டத்தரணி உட்பட மூவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டுள்ளர்