சஜித் தரப்புக்கு மற்றோர் அடி! அரசுடன் இணையப்போகும் உறுப்பினர்
புதிய அரசாங்கத்தில் இணைவதற்கான அழைப்பு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை பயன்படுத்தி நாட்டுக்காக பணியாற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்வாரா என வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர்,
"எனக்கு அரசாங்கத்தில் சேர அழைப்பு வந்துள்ளது. எனினும் நான் ஐக்கிய மக்கள் சக்தியை விட்டு வெளியேறத் தயாராக இல்லை,கட்சிப் பாதையில் இருந்து விலகிச் செல்லவும் நான் தயாராக இல்லை. ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நாட்டுக்காகப் பணியாற்றுவேன்.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டாலும், முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.சஜித் தரப்புக்கு மற்றோர் அடி! அரசுடன் இணையப்போகும் உறுப்பினர் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நன்கொடை வழங்கும் நிலையங்கள் இலங்கைக்கு வழங்கிய உதவிகளை அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த அனுமதித்தமை ஒரு சாதகமான நடவடிக்கையாகும்.
தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் தன்னால் இயன்றதைச் செய்துள்ளார்", எனக் குறிப்பிட்டார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
