யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை விசேட விடுமுறை
யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு நாளை (21) விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) பணித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த்திருவிழா நாளை (21) இடம்பெறவுள்ள நிலையில் இவ்வாறு விடுமுறை வழங்குவதற்கு பணிக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்திருவிழா வழமையாக பாடசாலை விடுமுறை நாட்களில் இடம்பெறுவது எனவும், இம்முறை பாடசாலை நாளொன்றில் இடம்பெறுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரதமர் பணிப்பு
இந்தநிலையில் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்களும் குறித்த நிகழ்வில் பங்குபெற வேண்டும் எனும் நோக்கில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை நாளை (21) வழங்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி ஆகியோர் இன்று (20) மதியம் பிரதமர் ஹரிணி அமரசூரியவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதமர், உடனடியாக கல்வி அமைச்சின் செயலாளருக்கு நாளைய தினம் யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகளுக்கு விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
