இறைச்சிக்காக கடத்தப்பட்ட மாடுகள் யாழில் மீட்பு: தீவிரமடையும் விசாரணை
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Sathangani
யாழ்ப்பாணம்(Jaffna) - மல்லாகம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் கொல்களம் ஒன்று இன்று (06) முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் மாடுகள் கொலை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் கீரிமலை மற்றும் மல்லாகம் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது அந்தக் கொல்களத்தில் இருந்து ஒரு பெரிய மாடும் அதன் கன்றுக்குட்டியும் மீட்கப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
வழக்கு விசாரணை
மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய குறித்த மாடும் கன்றுக் குட்டியும் தெல்லிப்பழையிலுள்ள ”அன்பு இல்லம்” எனும் பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நாளைய தினம் (07) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 7 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி