கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்
வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா குறித்த கலந்துரையாடல் ஒன்று யாழ் அரசாங்க அதிபர் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி 27, 28 ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர், இந்திய துணைத் தூதரக அதிகாரி இ. நாகராஜன், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இலங்கை இந்திய பக்தர்கள்
மேலும், கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா இலங்கை இந்திய பக்தர்கள் கலந்து கொள்ளும் பெரும் திருவிழாவாக முன்னெடுகின்ற நிலையில் துறைசார்ந்த திணைக்களங்களங்களை உரிய முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும், கச்சத்தீவு மனிதர்கள் இல்லாத தனித்தீவாக இருப்பதனால் சகல ஏற்பாடுகளுடன் நடப்பாண்டு திருவிழா கடந்த ஆண்டு திருவிழா ஒழுங்கமைப்பினைக் காட்டிலும் மேலும் புனிதமாக சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும், கடந்த ஆண்டு ஏதாவது சில குறைபாடுகள் இருப்பின் அதனை இக் கலந்துரையாடலில் தெரிவித்து, அவை குறித்து அதிக கவனம் செலுத்தி ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இது அமையவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |