வடமராட்சியில் இடம்பெற்ற அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்
அன்ரன் பாலசிங்கத்தின் 19 வது நினைவு தினம் வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்றது. போராளிகள் நலன்புரிச்சங்கத்தால் ஏற்ப்பாடு செய்யப்பட்ட
இந்நிகழ்வில் அன்னாரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பொதுமக்கள்,நலன் விரும்பிகள், போராளிகுடும்பங்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்

செய்தி - கபில்
இரண்டாம் இணைப்பு
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் 19வது ஆண்டு நினைவு தினம் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி அறிவக அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
இதன்போது ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபை உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
செய்தி -லின்ரன்
முதலாம் இணைப்பு
''தேசத்தின் குரல்'' என தமிழ் மக்களால் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கத்தின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பகுதியில் இன்றைய தினம் (14) காலை 10:30 மணியளவில் மிகவும் உணர்வுபூர்வமாக இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவருமான வேந்தன் தலைமையில் ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் ஆரம்பிக்கப்பட்டது.
மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது
பின்னர் மௌன அஞ்சலியை தொடர்ந்து ஜனநாயக போராளிகள் கட்சியின் நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களால் மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து பொதுமக்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 7 மணி நேரம் முன்