தலைவர் பிரபாகரனின் இதயத்தில் நின்ற இருவர்: சுவிஸ் மண்ணில் இருந்து வரும் செய்தி
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 17.12.2023 ஞாயிறு அன்று சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் ரகு தலைமையில் பிறிபேர்க் மாநிலத்தில் அரங்கம் நிறைந்த மக்களுடன் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
அதன்போது, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் மற்றும் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்து சு.ப.தமிழ்செல்வன் ஆகிய இருவரையும் தலைவர் பிரபாகரன் தன்னுடைய இதயத்திலே வைத்திருந்தார் என்று ரகு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ரகு தொடர்ந்தும் கூறுகையில், “எங்களது தமிழ்த் தேசத்தின் தலைவரையும், அவரது குடும்பத்தினரையும் அவர்களின் அதியுச்ச அர்ப்பணிப்பையும் கொச்சைப்படுத்தும் செயற்பாடுகள் தற்போது எங்கள் மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சுவிசில் 'தேசத்தின் குரல்' அன்ரன் பாலசிங்கம், அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!
திட்டமிட்ட சதிகள்
அதாவது சுவிஸ் மண்ணை மையப்படுத்தி இந்த சதி நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
எவ்வாறாயினும், அவை அனைத்திற்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் உத்தியோக பூர்வமான சுவிஸ் கிளைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
2009ஆம் ஆண்டு யுத்ததின் பின்னர் எமது இந்த கட்டமைப்புக்கள் மிக வேகமாக வளர்ந்திருக்கின்றன.
தலைவரின் வழிகாட்டல்
எமது இந்த வளர்ச்சியானது, இலங்கை அரசுக்காக இருந்தாலும் சரி, இந்திய அரசுக்காக இருந்தாலும் சரி பாரிய இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாவீரர்களின் தியாகத்தோடும், தலைவரின் வழிகாட்டலோடும் நாங்கள் தொடர்ந்தும் பயணிப்போம்” என்றார்.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |