அனுர அதிபரானாலும் நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றமில்லை: விஜித ஹேரத் அதிரடி
தமது கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) அதிபாரானாலும் நாட்டின் தற்போதைய நிலைமையை மாற்றியமைக்க முடியாது எனவும் இதற்கு சிறிது காலம் எடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இதேவேளை வீட்டு பொருளாதாரத்தை கவனமாக நிர்வகிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் நடைபெற்ற பொது பேரணியில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மந்திர சக்தி
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்; “சில நேரம் நினைத்துப் பார்க்கிறேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் முடியவில்லை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் முடியவில்லை. தேசிய மக்கள் சக்தி எப்படித்தான் இதனை தாங்குவது? எல்லோராலும் முடியாது என்றால், அதைச் செய்ய முடியாது தான்.
அனுரகுமார திஸாநாயக்க அதிபராவார், விஸ்வகர்மாவின் பலத்தினாலும் மந்திர சக்தியினாலும் இதை மாற்றுவதற்கு வழியில்லை.
கடின அர்ப்பணிப்பு செய்தால், பால் தேநீருக்குப் பதிலாக தேநீர் குடித்தால், தேவையற்ற செலவுகளைக் குறைத்து, நம் வீட்டுப் பொருளாதாரத்தை சிறிது நேரம் கவனமாக நிர்வகித்தால், அதைச் செய்வோம்.” என தெரிவித்தார்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |