ட்ரம்ப்பின் கார்க் தரையிறக்க திட்டமும் அநுர தரப்பு கலக்கமும்
ஓமானில் தூக்கப்பட்ட பாதாள உலக கிங்- பின் மிதிகம சூட்டி இன்று காலை இலங்கைக்குள் கொண்டுசெல்லப்பட்ட காட்சிகள் அல்லது அந்ததீவில் இணையவழி மோசடிகளை செய்த 125 சீனர்கள் குண்டுக்கட்டாக இன்று காலை கொழும்பில் இருந்து நாடுகடத்தப்பட்ட காட்சிகள் எல்லாம் இன்று காலை வந்தன.
ஆனால் இப்போதைய பொருளதாரா நெருக்கடி நிலையில் அதுவும் இன்று மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக புதிய பகீர் செய்தியை எதிர்கொண்டுள்ள இலங்கையருக்கு பாதாள உலக செய்திகள் இப்போதைக்கு ஈர்ப்புக்குரிய விடயமாக இருக்காது.
ஏனெனில் ஏற்கனவே விலைவாசியேற்றத்தால் அடிவாங்கிய இலங்கையர்கள் இன்று மின்கட்டணமும் உயர்த்தப்பட்டால் தமக்குரிய அன்றாட வாழ்வியலுக்காக இன்னும் ஓடவேண்டி வரும். அதேபோல நாட்டின் எரிபொருள் இருப்பைப் பாதுகாக்க இந்தியா ரஷ்யா என அனுர அரசாங்கமும் ஓடவேண்டித்தான் வரும்.
இலங்கைக்கு ஒருவாரத்தில் ரஷ்யாவின் உயர் முகங்கள் அடுத்தடுத்து பயணப்பட்டாலும் இலங்கைக்கு எண்ணெய் வழங்க ரஷ்ய தரப்பு ஒப்புக்கொண்டாலும், தற்போது தளர்த்தப்பட்ட ரஷ்ய எண்ணெய் மீதான தற்காலிக தடையை அமெரிக்க தலைவர் ட்ரம்ப் ஒருவேளை மீண்டும் ஏப்ரல் 11 இல் இறுக்கினால் அதன் பின்னர் ரஷ்ய எண்ணெயை அனுர அரசாங்கம் பெறுவது மிகவும் சவாலாக இருக்கும்.
உலகின் எண்ணெய் நெருக்கடிப் பாதகங்கள் இலங்கைக்கு மட்டுமல்ல அவை எல்லா நாடுகளையும் துரத்தினாலும் ஏற்கனவே பொருளாதார அடிவாங்கிய இலங்கைக்கு இது இடியாக வருகிறது.
இதற்கிடையே அமெரிக்கா ஈரானின் கார்க் தீவுமீது படையெடுக்கலாம் என்ற ஊகங்கள் மீண்டும் எண்ணெய் விலையை எகிற வைக்க இலங்கையும் பிதுங்கும் நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு..
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 7 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்