அநுர அரசின் பட்ஜெட் நாளை :பாதுகாப்பு அமைச்சுக்கு அதிகரிக்கப்பட்ட ஒதுக்கீடு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தை நாளை(07) வெள்ளிக்கிழமை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க சமர்ப்பிக்கவுள்ளார்.
வழமை போன்று இம்முறையும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஜனாதிபதி செலவினத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் அதிகரித்துள்ளன. அதேபோன்று புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு,கல்வி அமைச்சு, கமத்தொழில் அமைச்சு ஆகிய துறைகளுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று வெளியிட்ட தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வரவு செலவுத்திட்ட உரை
வரவு செலவுத்திட்ட உரையை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நவம்பர் 07ஆம் திகதி நாளைய தினம் சபையில் ஆற்றவுள்ளார், அதனைத் தொடர்ந்து நவம்பர் 08ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை விவாதத்தை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். நவம்பர் 15ஆம் திகதி முதல் டிசம்பர் 05ஆம் திகதி வரை 17 நாட்கள் குழுநிலை விவாதத்தை நடத்துவதற்கும், டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 .00 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர சனிக்கிழமை உள்ளிட்ட ஏனைய அனைத்து நாட்களிலும் வரவுசெலவுத் திட்ட விவாதம் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில்,2026 ஆம் ஆண்டுக் கான வரவு செலவுத் திட்டத்தில் செலவீனமாக ரூ. 4 இலட்சத்து 43,435கோடியே 64,68000 ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் செலவீனமாக ரூ. 4இலட்சத்து 21824 கோடியே 80,18000 ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான செலவீனம் ரூ. 21610 கோடியே 84,50000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
புத்தசாசன அமைச்சுக்கு அதிகரித்த நிதி ஒதுக்கீடு
2025 ஆம் ஆண்டுக்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு ரூ. 13,725,000,000 பௌத்த அலுவல்கள் திணைக்களம் ரூ. 3,563,000,000 முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ரூ. 210,000,000, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் ரூ. 270,000,000 . இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ரூ. 300,000,000 என ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சு ரூ. 14,500,000,000 பௌத்த அலுவல்கள் திணைக்களம் ரூ. 1,350,000,000 , முஸ்லிம் சமய பண்பாட்டு அலு வல்கள் திணைக்களம் ரூ. 204,000,000, கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம்ரூ. 178,000,000. இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் ரூ. 285,000,000 என்ற வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 2025 ஆம் ஆண்டை விட 2026 ஆம் ஆண்டுக்கு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சுக்கு ரூ. 77 கோடியே 50 இலட்சம் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு
2025 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக ரூ. 61,744 கோடியே 50 இலட்சம் ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக 64800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்களுக்காக ரூ. 3055 கோடியே 50 இலட்சம் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் ,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகிய 3 அமைச்சுக்களுக்குமாக மொத்தம் ரூ. 11,6980 கோடியே 5 இலட்சம் ஒதுக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்காக ஜனாதிபதி வசமுள்ள பாதுகாப்பு அமைச்சு, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளா தார அபிவிருத்தி அமைச்சு,டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுக்கு ரூ. 1.105.782.000 000 ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரு அமைச்சுக்களுக்குமான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதி செலவீனமாக ரூ. 297,49,80,000 ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு ஜனாதிபதிக்கான செலவினமாக ரூ. 1137,79,80000 ஒதுக்கப்பட்டுள்ளது.இது 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி செலவீனத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விடவும் ரூ. 838,50,00000 அதிகமாகும்.
அதேவேளை பிரதமர் செலவினமாக 2025 ஆம் ஆண்டுக்கு ரூ. 117,0000,000 ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பிரதமருக்கான செலவினமாக 97,50,00000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு பிரதமரின் செலவினத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட ரூ. 19,50,00,000 குறைவானதாகும் .
கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு
பொதுமக்களுடன் தொடர்புபட்ட கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட் டல் அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு ரூ. 30,050,000,000 ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 38,600,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 855 கோடி ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு ரூ. 271,000,000,000 ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்காக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சுக்கு 301,000,000,000ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் ரூ. 3000 கோடி மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு 496,500,000,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 596,000,000,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கு 99,500,000000 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்படுள்ளது .2025 ஆம் ஆண்டுக்கு சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கு 308,499,998,000 ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு 554,999,998,000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் 246,500,000.000 ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் கீழுள்ள நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 2025 ஆம் ஆண்டுக்கு ரூ. 714,177,500,000 ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு ரூ. 634,782,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டில் ரூ. 79,395,500,000 குறைக்கப்பட்டுள்ளது.2025 ஆம் ஆண்டுக்கு நீதி மற்றும் தேசிய ஒற்றுமைப்பாட்டு அமைச்சு ரூ. 54,106,300,000 ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு ரூ. 58,500,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது இதன்மூலம் 439 கோடி 37 இலட்சம் ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு
2025 ஆம் ஆண்டுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சுக்கு ரூ. 473,410,000,000 ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு ரூ. 446,000,000,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 2741 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கு கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்கு ரூ. 208,722,000,000ஒதுக்கப்பட்ட நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கு ரூ. 221,300,000,000 ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 125 கோடி 78 இலட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |