உலகின் மிகப்பெரிய செங்கல் கட்டிடங்களில் ஒன்று இலங்கையில்
1,700 ஆண்டுகள் பழமையான ஜேதவனராமய தூபி உலக அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஜேதவனராமய தூபி உலகின் மிகப்பெரிய செங்கல் கட்டிடங்களில் ஒன்று என தரப்படுத்தப்பட்டுள்ளது
சர்வதேச ஊடகமான CNN-இன் பயண மற்றும் கலாசாரப் பகுதியில் தூபி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
மிகப்பெரிய பொறியியல் சாதனை
மனிதகுலத்தின் மிகப்பெரிய பொறியியல் சாதனைகளில் ஒன்றாக ஜேதவனராமயவை இது அங்கீகரித்துள்ளது.

ஜேதவனராமயவை "நித்தியத்திற்காகக் கட்டப்பட்ட ஒரு பாரிய மாபெரும் கட்டமைப்பு" (Massive Megastructure built for eternity) என CNN வர்ணித்துள்ளது.
கி.பி. 4 ஆம் நூற்றாண்டில் இது கட்டி முடிக்கப்பட்டபோது, எகிப்தின் கீசா பிரமிடுகளுக்கு அடுத்தபடியாக, பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட மூன்றாவது மிகப்பெரிய கட்டமைப்பாகத் திகழ்ந்தது.
மதில் ஒன்றை எழுப்ப முடியும்
சுமார் 93.3 மில்லியன் சுட்ட செங்கற்களால் உருவாக்கப்பட்ட இது, ஆரம்பத்தில் 122 மீற்றர் (400 அடி) உயரமாக இருந்தது.

தற்போது 71 மீற்றர் உயரத்தில் காணப்பட்டாலும், கொள்ளளவின் அடிப்படையில் இதுவே உலகின் மிகப்பெரிய செங்கல் கட்டமைப்பாக இன்றும் நீடிக்கிறது.
ஜேதவனராமயவில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களைக் கொண்டு, லண்டனிலிருந்து எடின்பரோ வரை அல்லது நியூயோர்க்கிலிருந்து பிட்ஸ்பர்க் வரை 3 அடி உயரமுள்ள மதில் ஒன்றை எழுப்ப முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |