ஐ.நாவால் அம்பலப்படும் அநுர அரசின் கமுக்கம்
இலங்கையில் இன்றும் வழமை போலவே அரசியல்வாதிகளின் வாழ்த்துச் செய்திகள் மற்றும் நல்லிணக்க காட்சிகளுடனும் தைபிறந்தால் வழிபிறக்கும் என்ற முத்தாய்ப்புகளுடன் இலங்கையில் தைப்பொங்கல் நாள் கடக்கிறது.
ஈழத் தமிழினத்தைப் பொறுத்த வரை இன்று போல இதுவரை எத்தனையோ பொங்கல் வாழ்த்துக்களை கண்ட இனம் அது. அதிலும் இரா.சம்பந்தன் 2015 இல் சொன்ன அடுத்த பொங்கலுக்கு இடையில் தமிழருக்கு அரசியல் தீர்வு என்ற காலங்கடந்தே இந்த வருடத்துடன் 10 வருடங்களாகின்றது.
ஆயினும் இன்றைய 2026 பொங்கலிலும் அவர் குறிப்பிட்ட அந்த தீர்வு வரவில்லை. மாறாக அவரது கட்சிக்குள் தான் குடுமிப்பிடிகள் வந்தன.
இன்று அரசாங்கம் என்ற வகையில் அநுர தரப்பின் நல்லிணக்கப் பொங்கல் உலையேற்றக் காட்சிகள் யாழில் இரண்டு இடங்களில் வெளிப்பட்ட நிலையில் அந்த பொங்கி வந்த நல்லிணக்க காட்சிகளை மங்க வைக்கும் வகையில் தமிழர்கள் மீது சிறிலங்கா நடத்திய கந்தகநாசகாரப் போரின் பாலியல் வன்முறைகள் குறித்த ஐ.நா புதிய அறிக்கை இந்தவாரம் வெளிப்பட்டுள்ளது.
ஐநாவின் இந்த அறிக்கையில் முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை சிறிலங்கா படையினரால் தமிழர்கள் மீது இழைக்கபட்ட பாலியல் குற்றங்களும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களே என்ற குற்றசாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வாறான குருரங்களை செய்த படையினர் அல்லது அதற்குப் பொறுப்பாக இருக்ககூடிய படைமுகங்களை தண்டிக்க விரும்பாத அரசாங்கங்களின் பட்டியலில் அனுரவின் ஆட்சியும் இப்போது உள்ளடக்கப்படும் நிலையில் இந்த விடயங்கள் மையப்படுத்தி வருகிறது இன்றைய செய்திவீச்சு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |