புதிய லிபரல் வாதத்தை மறைமுகமாக பரவலாக்கும் அநுர அரசு
அரசாங்கம் மக்களால் வெறுக்கப்பட்ட புதிய லிபரல் வாதத்தை மறைமுகமாக பரவலாக்க முயல்வதாக பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம அரசாங்கத்தை நேரடியாக விமர்சித்துள்ளார்.
புதிய லிபரல் வாதமும் மோசடி அரசாங்கங்களை வெறுத்தே நாம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றினோம்.
ஆனால் எமது அரசாங்கம் புதிய லிபரல் வாத அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பையே முன்வைக்க முயற்சிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
கல்வி மறுசீரமைப்பு
கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பேராசிரியர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“கல்வி மறுசீரமைப்பு விடயதானத்தில் கடந்த வருடமும் அதற்கு முன்னைய வருடங்களில் எங்களுக்கு ஒரே விடயத்ததை திரும்ப திரும்ப சொல்ல வேண்டி ஏற்பட்டது.
வேறு ஒன்றும் கதைப்பதற்கு இல்லாமல் இல்லை. ஏனென்றால் நாங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை என்பதாலே அவ்வாறான செயற்பாட்டில் முயற்சித்தோம்.
புதிய கல்வி மறுசீரமைப்பு விடயதானத்திலும் அதேயே செய்ய வேண்டியுள்ளது.
மாக்ஸின் விளக்கம்
ஒரே விடயத்தை திரும்ப திரும்ப கூறும் நோய் எமது நாட்டுக்கு மட்டும் உரித்தானதல்ல. இது பெரும் சிக்கலாக உள்ளது.
கால்மாக்ஸ், புமோரியல் தொடர்பில் எழுதும் போது, இவ்வாறு சொல்லுகிறார். ஏகல் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.
இந்த நிகழ்வுகளின் மீள் உருவாக்கம் முதலில் பேரழிவாகவும் பின்னர் அதிசயமாக வருகிறது என்பது மாக்ஸின் விளக்கம்.
அது அவ்வாறிருக்க இலங்கையின் முக்கிய நிகழ்வுகள் முதலில் பேரழிவாகவும் பின்னர் அதிசயக்க பேரழிவாகவே ஏற்படுகிறது” என கூறியுள்ளார்.
