மதச்சார்பற்ற இலங்கையை உருவாக்க முனையும் அநுர அரசு : சாடும் விமல் வீரவன்ச

National People's Power - NPP
By Sathangani Jan 20, 2025 04:27 AM GMT
Report

இலங்கையை மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேசிய மக்கள் சக்தி இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணியின் (JNP) தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் (Npp) காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகத் தற்போது செயற்படுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடு பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அத்துடன் அரசின் ஒரு சில செயற்பாடுகளால் நாட்டின் சுயாதீனம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

எனக்கு எதுவும் தெரியாது : சிஐடியிடம் கைவிரித்த கோட்டாபய

எனக்கு எதுவும் தெரியாது : சிஐடியிடம் கைவிரித்த கோட்டாபய

புதிய அரசமைப்பு உருவாக்கம்

இலங்கையின் தேசியத்துக்கு முன்னுரிமை வழங்கி இந்த அரசு செயற்படாது. புதிய அரசமைப்பு உருவாக்கம் குறித்து தற்போது பேசப்படுகின்றது.

மதச்சார்பற்ற இலங்கையை உருவாக்க முனையும் அநுர அரசு : சாடும் விமல் வீரவன்ச | Anura Govt Is Trying To Create A Secular Sri Lanka

இலங்கையைச் மதச் சார்பற்ற நாடாக மாற்றியமைக்கும் வகையில் புதிய அரசமைப்பை உருவாக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்கள் இந்த அரசில் முன்னிலை பதவிகளில் உள்ளார்கள். அரசும் அந்த நிலைப்பாட்டில் தான் உள்ளது.

மாற்றத்துக்காகவே மக்கள் புதியவர்களைத் தெரிவு செய்தார்கள். ஆனால், புதியவர்கள் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி எவ்விடத்திலும் பேசுவதில்லை. அவர்களைத் தெரிவுசெய்ததன் பயனை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான தகவல்

தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதி

அதிகாரத்தில் இருக்கும்போதும் இல்லாத போதும் மக்களின் பிரச்சினைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் நாங்கள் குரல் கொடுப்போம்.

மதச்சார்பற்ற இலங்கையை உருவாக்க முனையும் அநுர அரசு : சாடும் விமல் வீரவன்ச | Anura Govt Is Trying To Create A Secular Sri Lanka

தேசியத்தைப் பாதுகாத்தால் மாத்திரமே இலங்கை என்ற அடிப்படையில் முன்னேற முடியும். தேசியத்தைப் பாதுகாப்பதற்காகச் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் நாம் ஈடுபடவுள்ளோம். கடந்த காலங்களைக் காட்டிலும் இனி உத்வேகத்துடன் செயற்படுவோம்.

தேசிய மக்கள் சக்தி தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாகத் தற்போது செயற்படுகின்றது. ஆகவே இந்த அரசுக்குக் கடந்த காலத்தை நினைவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது" என தெரிவித்தார்.

ராஜபக்சக்களை அரசியலில் அசைக்க முடியாது - சூளுரைக்கும் நாமல்

ராஜபக்சக்களை அரசியலில் அசைக்க முடியாது - சூளுரைக்கும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்