அரச ஊழியர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறை : சாடும் நாமல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறையை கையாள்வதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது சவால் மிகுந்த காலகட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுமையாக செயற்பட வேண்டும்.
நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணி
அத்துடன், இலங்கை காவல்துறையானது முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு எதிரான கடுமையான அடக்குமுறையை அரசாங்கம் கையாள்கின்றது.

இந்த விடயங்களின் அடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியில் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கலந்து கொள்ள வேண்டும்” என நாமல் ராஜபக்ச கோரிக்கை தெரிவித்துள்ளார்.
குண்டு வெடிப்புக்களால் அதிரும் இந்தியா...! காவல் நிலையத்தில் வெடித்து சிதறிய வெடிபொருட்கள்: 7 பேர் பலி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |