நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அநுர அரசு : நாமல் குற்றச்சாட்டு

Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Law and Order NPP Government
By Sathangani Feb 14, 2026 04:16 AM GMT
Report

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் இது முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (13) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. அந்த வாக்குறுதிகள் ஏதும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.

கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID

கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID

அமரகீர்த்தி அத்துகோரல படுகொலை

மாறாக அரசியல் பழிவாங்கல்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. எம்மை சிறைக்கு அனுப்புவதாலோ அல்லது நெருக்கடிக்கு உள்ளாக்குவதாலோ பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அநுர அரசு : நாமல் குற்றச்சாட்டு | Anura Govt Try To Politicize Court System Namal

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவும் முடியாது. ஆகவே மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல 2022 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தற்போது மரண தண்டனை வழங்கியுள்ளது. இது வரவேற்கத்தக்கது.

யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்...!

யாழில் விபத்தில் சிக்கி ஒருவர் படுகாயம்...!

முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள்

அமரகீர்த்தி அதுகோரலவின் மரணத்தை நியாயப்படுத்தும் தரப்பினர் அரசாங்கத்தில் உள்ளார்கள். இது முற்றிலும் தவறானது. அரசியல் கட்டமைப்பின் மீது தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் தான் வெறுப்பை ஏற்படுத்தினார்கள். அதன் விளைவாகவே முழு நாடும் பற்றி எரிந்தது.

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த முயற்சிக்கும் அநுர அரசு : நாமல் குற்றச்சாட்டு | Anura Govt Try To Politicize Court System Namal

அரசாங்கம் நீதிமன்ற கட்டமைப்பை அரசியல்மயப்படுத்த முயற்சிக்கிறது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது ஆட்சியில் நீதிமன்றங்கள் சுயாதீனமாகவே செயற்பட்டது. எம்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு நீதிமன்றங்கள் ஊடாகவே தீர்வு பெற்றுக்கொள்வோம்“ என தெரிவித்தார்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022