இனப்படுகொலை விவகாரத்தை கைகழுவும் அநுர : ஏமாற்றப்படும் தமிழ் சமூகம்
தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதாக கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சமூக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான வைஸ்ணவி தெரிவித்துள்ளார
அத்துடன் தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் எந்தவொரு பாரிய பிரச்சினை குறித்தும் ஜனாதிபதி கவனஞ் செலுத்தவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியமைப்பில் பெரிதும் பேசப்பட்ட ஒரு விடயம் அநுரவிற்கான தமிழர் பிரதேசங்களில் கிடைத்த ஆதரவு.
காரணம், பாரம்பரிய தமிழ் கட்சிகளையும் தாண்டி ஒரு பெருத்த ஆதரவு தமிழ் மக்கள் அநுரவிற்கு வழங்கி இருந்தனர். இது அநுர மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை என்பதை தாண்டி தமிழ் அரசியல் காட்சிகள் மீதான தமிழ் மக்களின் வெறுப்பும் ஆதங்கமும் எனலாம்.
ஆகையால், தமிழ் அரசியல் தலைமைகளுக்கு பாடம் புகட்டுவதற்காக தமிழ் மக்கள் அநுரவிற்கு வாக்களித்த நிலையில், அது தமிழ் மக்களுக்கு எவ்விதத்திலாவது சாதகமாக அமைகின்றதா என சிந்தித்தால் அது கேள்விக்குறிதான்.
காரணம் தேர்தல் பிரசாரங்களின் போது காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதாகவும் தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத்தருவதாகவும் கூறிய அநுர அதை நிறைவேற்றினாரா என்றால் இல்லை.
அதற்கான ஒரு முதல் படியை கூட அவர் எடுத்துவைக்கவில்லை, அண்மையில் இந்தியா விஜயத்தின் போது தமிழ் மக்கள் குறித்து கலந்துரையாடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு அதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அடுத்தப்படியாக, தமிழர் பிரதேசங்களில் இடம்பெறும் எந்தவொரு பாரிய பிரச்சினை குறித்தும் சரியான கரிசனை என்பது வழங்கப்படவில்லை.
உதாரணமாக, அண்மையில் யாழிற்கு அநுர விஜயம் செய்து இருந்தபோது, தையிட்டி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதும் அதனை பெரிதும் பொருட்படுத்தினாரா என்பது கேள்விக்குறியே.
மேலும், யாழ் கலாசார மையத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டமை பாரிய சர்ச்சையை கிளப்பிய நிலையில் அது குறித்து அவர் வாய் கூட திறக்கவில்லை.
இவ்வாறு இருப்பினும், அவரின் வருகைக்கு தமிழ் மக்கள் அளித்த ஆதரவு மிகவும் அன்பு கலந்ததாக காணப்பட்டது. அம்மக்களுக்கு அநுர என்ன பதில் தர போகின்றார் ? பதில் வழங்காமல் நழுவுவது ஏன் மற்றும் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கான கரணம் என்ன என்பது தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சி......
அரசியல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி அவசியம்...! சுட்டிக்காட்டும் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |