ரஷ்ய சுற்றுலா பயணியிடம் கைவரிசை காட்டிய ஹோட்டல் உரிமையாளரின் மகள்
Sri Lanka Police Investigation
Tourism
Arrest
By Sumithiran
உனவடுன, பிலகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியின் 620,000 ரூபாயைத் திருடிய குற்றச்சாட்டில், ஹோட்டல் உரிமையாளரின் 19 வயது மகள் உனவடுன சுற்றுலா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணி வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், காவல்துறையினர் மேற்கொண்ட துரித விசாரணையின் பலனாக குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
சுற்றுலா பயணி மறைத்து வைத்திருந்த கண்காணிப்பு கமரா
சுற்றுலாப் பயணி தனது அறையில் மறைத்து வைத்திருந்த கண்காணிப்பு கமராவில், சந்தேகநபர் பலமுறை அறைக்குள் நுழைந்த காட்சிகள் பதிவாகியிருந்தன.

குறித்த ஹோட்டலில் ஏற்கனவே பல திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகநபர் நாளை (24) காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி