பலாலி ஜொக்கிங் அநுர தமிழர்களின் ஜனநாயகனா? தமிழரசின் புறக்கணிப்பும் பிரஜாசக்தி காரணமும்!
யாழ்ப்பாணத்தின் வலிகாம் பலாலி அந்தனிபுரம் பகுதியில் இன்று விடிந்தும் விடியாத பொழுதில் அரைக்காற்சட்டை அணிந்து நெடிதுயர்ந்த ஒரு மெய்பாதுகாப்பு சீருடைக்காரருடன் ஜனாதிபதி அநுர செய்த ஜொங்கிங் தமிழ்தேசிய அரசியல்வாதிகளுக்கு அவர் வழங்கிய கருத்தியல் கிக்கிங் ஆகவே தெரிந்தது.
அநுரவின் யாழ்ப்பாண நிகழ்வுகளை தாம்; புறக்கணிப்பதாக தமிழரசில் இருந்து சுமந்திரன் சீற்றத்துடன் டு (கோபத்தை குறிப்பிடும் சிறார் பேச்சுவழக்கு) விட்டுக்கொண்டாலும் அநுர அரசின் பிரஜாசக்தி திட்டமே இந்த புறக்கணிப்புக்கு காரணம் என சொல்லிக்கொண்டாலும் யாதார்த்தத்தில் பலாலி இன்று அந்தனிபுரம் பகுதியால் ஓடிய அநுரவுடன் கைகுலுக்கி செல்பி எனப்படும் சுயப்படங்களை கிளிக்கிக்கொள்ள மக்கள் ஆர்வப்பட்டதான செய்திகளை வெளிட்ட அவரது தரப்பினர் இதுவரை இருந்த ஜனாதிபதிகளில் அநுரதான் தமிழர்களின் மனங்களை வென்ற ஜனநாயகன் என்ற தோற்பபாட்டையும் உருவாக்கத்தலைப்பட்டனர்.
ஆனால் இது அநுரவுக்காக தானா சேர்ந்த கூட்டமா? அல்லது அவரது தமிழ் தோழர்களால் கூட்டப்பட்ட கூட்டமாக என்பதில் வாதப்பிரதிவாதங்கள் உள்ள நிலையில் அநுரவின் வடக்கு பயணம் உட்பட்ட விடயங்களை தாங்கிவருகிறது செய்திவீச்சு ...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |