இலங்கையின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அநுர…!
அநுரகுமார திஸாநாயக்கவே(anura kumara dissanayake) இந்நாட்டின் கடைசி நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருக்க வேண்டும்.”என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங்க(Professor Ashu Marasinghe) குறிப்பிட்டார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சந்திரிக்கா,மகிந்தவின் வாக்குறுதி
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்குரிய சந்தர்ப்பம் உதயமாகியுள்ளது. அதனை சரிவர பயன்படுத்தி வழங்கிய உறுதிமொழியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவேன் என உறுதியளித்தே சந்திரிக்கா(chandrika kumaratunga) இரு தடவைகள் ஆட்சிக்கு வந்தார். மஹிந்தவும்(mahinda rajapaksa) அந்த உறுதிமொழியையே வழங்கினார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மேற்படி தரப்புகளுக்கு ஜே.வி.பியினர் ஆதரவு வழங்கினர்.
நாடாளுமன்றில் அறுதிப் பெரும்பான்மை
நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் உள்ளன. அதனை சரிவர பயன்படுத்தி அரசியலமைப்பு மாற்றத்தை செய்ய வேண்டும்.
இது தொடர்பில் தற்போது கருத்தாடல் இல்லை. எனவே, கருத்தாடலை நாம் ஆரம்பிக்க வேண்டும். அரசாங்கமும் வழங்கிய வாக்குறுதியை மறந்து செயற்படக்கூடாது எனவும் ஆசுமாரசிங்க சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

