அரசியல் ஆதாயத்துக்காக காற்றாலையை வைத்து காய் நகர்த்திய அநுர: அம்பலமான அதிர்ச்சி தகவல்
மன்னார் (Mannar) காற்றாலை விவகாரத்தில் இருந்து இந்தியாவை (India) விலக்கி வைக்க வேண்டும் என்பது மட்டுமே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) நோக்கம் என அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அரச தலைவர் தேர்தல் பிரசாரத்தின் போது மன்னார் மக்களுக்கு எதிராக வரும் திட்டத்தை தடுத்து நிறுத்துவேன் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
இலங்கையில் இருந்து இந்தியாவை புறந்தள்ளி வைப்பதுதான் அநுர குமார திஸாநாயக்கவின் நோக்கம்.
இதனடிப்படையில் காற்றாலை விவகாரத்தில் அவர் இந்தியாவை வெளியேற்றுவேன் என்ற ரீதியில்தான் சுட்டிக்காட்டியிருந்தார் அதே போல இந்தியாவை வெளியேற்றிவிட்டார்.
அதற்கு மன்னார் மக்களை அவர் பயன்படுத்திகொண்டார், இதையடுத்து அந்த காற்றாலை திட்டம் மற்றுமொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்தியாவிடம் இருந்து பறிக்கப்பட்டு இலங்கையின் நிறுவனத்திடம் இந்த திட்டம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலம் அதனை நடைமறைப்படுத்துவதற்கான போதுமான தொழிநுட்பம் இங்கு இல்லை.
ஆகையினால் கட்டாயம் இலங்கை நிறுவனம் சீனா மற்றும் பிற சர்வதேச நாடுகளை நாடும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் சர்வதேச அரசியலின் தாக்கம், தற்போதைய அரசின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கை மற்றும் நடைமுறை அரசியல் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
