அநுரவின் அரசியல் ஆட்டத்தில் குறுக்கிடுமா ரணில் - சஜித்தின் கூட்டணி
ரணில் மற்றும் சஜித் ஆகியோரின் கூட்டணியை உடைக்கவில்லை என்றால் அது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) எதிர்கால அரசியலுக்கு இடைஞ்சலாக இருக்குமென புலனாய்வுச் செய்தியாளர் எம்.எம்.நிலாம்டீன் (Nilamdeen) சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்தியாவை அனுசரித்து சென்றால் மாத்திரமே அநுரவால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மற்றும் முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) கூட்டணியை உடைக்க முடியும்.
அரசியல் வருகை
அத்தோடு, அநுரவின் அரசியலுக்கு ஆபத்தானவராக ரணில் இருக்க போகின்றார்.
ரணில் வெளியில் இருக்கும் காரணத்தினால் ரணிலை இந்தியா (India) பயன்படுத்த பார்க்கும்.
அத்தோடு, படித்தவர்களின் அரசியல் வருகையை பொருத்தமட்டில் படிப்புடன் அரசியல் அனுபவமும் முக்கியமானது.
மேலும், அநுரவின் அரசியல் எதிர்காலம், அநுரவின் ஆட்சியில் படித்தவர்களின் வகிபங்கு, தொடரும் இலங்கை அரசியல் மீதான சீனா (China) மற்றும் இந்தியாவின் பார்வை மற்றும் அநுரவின் அரசியலில் சஜித் மற்றும் ரணிலின் ஈடுபாடு என்பவற்றை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
