மகிந்தவின் சகாவுக்கு விளக்கமறியல்!
புதிய இணைப்பு
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட்ட எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் அவர் கைது செய்யப்பட்டு இன்று (23.01.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் பல முக்கிய பதவிகளை வகித்த அனுஷ பெல்பிட்ட (Anusha Palpita) கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுஷ பெல்பிட்ட இன்று (23.01.2026) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் முன்னாள் ஊடக அமைச்சின் செயலாளரும், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRCSL) முன்னாள் தலைவராகவும் இருந்துள்ளார்.
கைது செய்ய நடவடிக்கை
ரூ.46 மில்லியன் பெறுமதியான பணத்தைப் பெற்றதற்கான மூலத்தை வெளியிடத் தவறியதற்காக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அவர் இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 23 (அ) 1 இன் கீழ் மோசடியாக சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் (CIABOC) தகவலின்படி, அனுஷ பல்பிட இன்று (23) காலை ஆணைக்குழுவிற்கு வருகை தந்து, ஆரம்ப வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |