மீண்டும் அதிக டொலர்களை குவித்த ஏற்றுமதி!
இலங்கை தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதியில் முன்னைய காலப்பகுதிகளைப் போல் கடந்த மாதம் அதிகளவான அந்நியசெலாவணியை சம்பாதித்துள்ளது.
அந்த வகையில் ஜூன் மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் 536.65 மில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
எனினும் கடந்த ஜூலை மாதத்தில் 522.13 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்ற போதும் 500 மில்லியன் டொலர்களை விட அதிகமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் ஈட்டியுள்ள தொகை
இந்நிலையில், இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களைக் கருத்தில் கொண்டால், நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானம் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.
மேலும், 2021ஆம் ஆண்டில் ஆடை ஏற்றுமதி மூலம் இலங்கை 5.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இலங்கையின் தைக்கப்பட்ட ஆடைகளை அதிகளவாக இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தையும் ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

