இலங்கைக்கு அதிக அந்நியசெலாவணியை ஈட்டும் ஆடை ஏற்றுமதி!
இலங்கை தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதியில் முன்னைய காலப்பகுதிகளை விட கடந்த மாதம் அதிகளவான அதிக அந்நியசெலாவணியை சம்பாதித்துள்ளது.
தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதியால் கடந்த மாதம் 537 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் பெற்றுள்ளதாக தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.
அதேவேளை இந்த வருடத்தில் முதல் அரையாண்டு காலப்பகுதியில் 2.8 பில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளதாக தொழிற்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா முதலிடம்
மேலும் கடந்த ஆண்டுகளில் கொரோனா நோய்ப்பரவல் காரணமாக பின்தங்கிய நிலையிலுள்ள தைக்கப்பட்ட ஆடைகளின் ஏற்றுமதி தற்போதைய காலங்களில் உயர்ந்துள்ளதாகவும் இதனால் அதிகளவான அந்நியசெலாவணி பெற்றுக் கொள்கிறதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை இலங்கையின் தைக்கப்பட்ட ஆடைகளை அதிகளவாக இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தையும் ஐரோப்பிய நாடுகள் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
