முற்றுகிறது முறுகல்:மீண்டும் ட்ரம்பை சீண்டும் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்(donald trump) முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலோன் மஸ்க்(elon musk), ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கை மீண்டும் கிளறியுள்ளார்.
பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனின் சீல் வைக்கப்பட்ட ஆவணங்களில் ட்ரம்பின் பெயர் இருப்பதாக மஸ்க் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் சிறுமிகள் பாலியல் குற்றவாளி
"அதிகாரபூர்வ ஜெஃப்ரி எப்ஸ்டீன் சிறுமிகள் பாலியல் குற்றவாளி (Pedophile) கைது எண்ணிக்கை: 0 0 0 0" என்று எக்ஸ் பதிவில் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
What’s the time? Oh look, it’s no-one-has-been-arrested-o’clock again … pic.twitter.com/CO9xJz68Tf
— Elon Musk (@elonmusk) July 7, 2025
முன்னதாக, "எப்ஸ்டீன் ஆவணங்களில் ட்ரம்ப் இருக்கிறார். அதனால்தான் அவை பொதுவில் வெளியிடப்படவில்லை" என்று மஸ்க் ஜூன் மாதம் பதிவிட்டிருந்தார். பின்னர், அந்தப் பதிவை நீக்கி, "நான் எல்லை மீறிவிட்டேன்" என்று கூறியிருந்தார்.
எப்ஸ்டீன் மற்றும் ட்ரம்ப் 1990-களில் நண்பர்களாகவும் அண்டை வீட்டாராகவும் இருந்ததாலும், ஒரே விருந்துகளில் கலந்துகொண்டதாலும், ட்ரம்பின் பெயர் எப்ஸ்டீன் ஆவணங்களில் உள்ளதா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
