இந்தியா உட்பட பிரபல நாடுகளுக்கு ட்ரம்ப் வைத்த செக்.!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், BRICS கூட்டணியின் அமெரிக்கா எதிர்ப்புக் கொள்கைகளுக்கு ஒத்துழைக்கும் நாடுகளுக்கு கூடுதல் 10% இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ Truth Social கணக்கில், “BRICS கூட்டணியின் அமெரிக்கா எதிரிப்பு கொள்கைகளை ஏற்றுக் கொள்கிற எந்த நாட்டுக்கும் கூடுதல் 10% வரி விதிக்கப்படும்.இதில் எந்தவிதமான விலக்குகளும் இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் BRICS நாடுகள் உச்சி மாநாட்டிற்காக ஒன்று கூடிய நேரத்தில் வெளியாகியுள்ளது.
BRICS கூட்டணி
BRICS கூட்டணியில் தற்போது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, சவுதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எத்தியோப்பியா, இந்தோனேசியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் உள்ளன.
இந்த கூட்டணியானது, “உலகின் தெற்குப் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளுக்கான அரசியல் மற்றும் தூதரக ஒருங்கிணைப்பு அமைப்பாகவும், பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட்டும் வருகிறது.
பெரும் பின்னடைவு
இந்நிலையில் ட்ரம்பின் அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால், அது அமெரிக்காவுடன் வணிக உறவு கொண்ட நாடுகளுக்கு பெரும் பின்னடைவாக அமையலாம்.
குறிப்பாக இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள், ஒருபக்கம் அமெரிக்காவுடன் வலுவான வர்த்தக உறவுகளை வைத்திருக்கின்றன, மறுபக்கம் BRICS உடன் செயல்பட்டுவருகின்றன.
இந்நிலையில், அவர்கள் எவ்வாறான நிலைப்பாடு எடுக்கப்போகின்றனர் என்பது எதிர்பார்ப்புக்குரிய விடயம்.
மேலும் இது உலக வர்த்தகத்தில் நம்பிக்கையைக் குறைக்கும் வகையிலும், வர்த்தக பாதைகளை மறுசீரமைக்க வைக்கும் வாய்ப்புக்களை கொண்டுள்ளதாகவும் நிபுணர்கள் தெரவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
