இலங்கையில் தனிநபர் வாழ்வதற்கு தேவையான பணம் : வெளியான தகவல்
இலங்கையில் தனிநபர் ஒருவர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்த செலவு குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயத்தினை இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) வெளியிட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோட்டின்படி, ஒரு தனிநபர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 16,730 ரூபாய் தேவைப்படுகிறது.
அதிகூடிய செலவைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு
அதற்கமைய, நாட்டின் அதிகூடிய செலவைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ள நிலையில் அங்கு ஒருவர் வாழ்வதற்கு மாதம் 18,044 ரூபாய் அவசியமாகின்றது.

மிகக்குறைந்த செலவைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளதுடன் இங்கு அடிப்படைத் தேவைகளுக்கு 15,997 ரூபாய் போதுமானதாக உள்ளது.
பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தரவுகள் மாதாந்தம் திருத்தப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாடளாவிய ரீதியில் 2025 டிசம்பரில் 16,658 ரூபாயாக இருந்த தனிநபர் மாதாந்த செலவு 2026 ஜனவரியில் 16,730 ரூபாயாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |