சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination Sri Lankan Schools
By Sathangani Jul 04, 2026 04:49 AM GMT
Report

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்து முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த விண்ணப்பங்களை நேற்று (03) முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களும் தத்தமது பாடசாலை அதிபர்கள் மூலமாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தனித்தனியாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வலி. கிழக்கு தவிசாளர் உள்ளிட்டோருக்கு பிடியாணை! நீதிமன்றின் உத்தரவு

வலி. கிழக்கு தவிசாளர் உள்ளிட்டோருக்கு பிடியாணை! நீதிமன்றின் உத்தரவு

விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்

தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், அடையாள அட்டை இல்லாத விண்ணப்பதாரர்கள் தங்களது பாதுகாவலரின் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! | Applications For 2026 Gce O L Examination Doe

விண்ணப்பதாரர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/ அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகியவற்றுக்கு பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

29 வயது இளம் மனைவியை கொன்ற கணவன் - வலைவீசும் காவல்துறை

29 வயது இளம் மனைவியை கொன்ற கணவன் - வலைவீசும் காவல்துறை

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட பிரதியைப் பதிவிறக்கம் செய்து, எதிர்காலத்தில் தேவைப்பட்டால் சமர்ப்பிப்பதற்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! | Applications For 2026 Gce O L Examination Doe

பாடசாலை மாணவர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான பயனர்பெயர்கள் மற்றும் கடவுச்சொற்கள் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இப்பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியாது என்பதுடன், எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Headphone அணிந்து செல்லும் பாதசாரிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை

Headphone அணிந்து செல்லும் பாதசாரிகளுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026