அவுஸ்திரேலியா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு நற்செய்தி
2026 ஆம் ஆண்டுக்கான அவுஸ்திரேலிய விருதுகள் புலமைப்பரிசிலுக்கான (Australia Awards) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்த மதிப்புமிக்க புலமைப்பரிசில்கள் இலங்கை உட்பட தகுதியுள்ள நாடுகளைச் சேர்ந்த சிறந்த நபர்களுக்கு முன்னணி அவுஸ்திரேலிய நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கின்றன.
குறித்த புலமைபரிசில்கள், தங்கள் நாடு திரும்பியதும், தங்கள் நாடுகளின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விண்ணப்ப காலம்
இந்த நிலையில், விண்ணப்பதாரர்கள் பல்வேறு துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
ஆர்வமுள்ளவர்கள் தகுதி அளவுகோல்கள், விண்ணப்ப வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் விவரங்களைச் சரிபார்க்க https://rb.gy/mewctl இணைப்பை அணுகவும்.
இதேவேளை, விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் ஏப்ரல் 30 ஆம் திகதியோடு நிறைவடைகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |