மூன்று நாட்களில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

Ranil Wickremesinghe Immigration Department of Immigration & Emigration
By Dharu May 30, 2023 03:14 PM GMT
Report

அரச சேவையை எண்ணியல்(digital) மயமாக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

அதற்கமைய, நாட்டின் எந்தப் பிரதேசத்தில் வசிப்பவரும் தனது கடவுச்சீட்டை மூன்று நாட்களுக்குள் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

அதிபர் ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட '101 கதா' நிகழ்ச்சியில் அண்மையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சட்டவிரோத செயற்பாடு

மூன்று நாட்களில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் | Apply For Passport Online Immigration Govt Sl

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் அருகிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று விரல் அடையாளம் பதித்த பின்னர், இணைய முறையின் மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

50 பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளம் பெறும் இயந்திரங்கள் உட்பட தேவையான உபகரணங்களை ஏற்கனவே நிறுவியுள்ளதாகவும், தபால் திணைக்களம் இந்த நடவடிக்கைகளுக்காக புதிய தபால் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்

,“கடவுச்சீட்டு வழங்குவதில் தரகர்கள் ஏதோ ஒரு வகையில் தலையிடுவதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பல தகவல்கள் வெளியாகின.

அதன் பிரகாரம், இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு புதிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் பணிப்புரை வழங்கப்பட்டது.

புதிய முறை

மூன்று நாட்களில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் | Apply For Passport Online Immigration Govt Sl

அதன்படி, நாங்கள் உருவாக்கிய புதிய திட்டத்தை ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் வரலாற்றில் இந்த வேலைத்திட்டம் ஒரு திருப்புமுனையாகும்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அடுத்த வருடம் 75 வருடங்களை பூர்த்தி செய்யவுள்ளது. அந்த நேரத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டால், அது திணைக்களம் அடைந்த பெரும் சாதனை என்றே கூற வேண்டும்.

இந்தப் புதிய முறையின்படி ஒருவர் வீட்டில் இருந்தபடியே இந்தச் சேவையைப் பெற முடியும். www.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்கு பிரவேசித்து, கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தல் (இணைய முறை) என்ற இடத்தில் உரிய தரவை உள்ளிட்ட பின்னர், தகவலை சரிபார்த்த பிறகு பதிவு செய்ய வேண்டும்.

அதன் பின்னர் உரிய விண்ணப்பம் விண்ணப்பதாரருக்கு அனுப்பிவைக்கப்பட்டு அதனை பூர்த்தி செய்து மென் பிரதியை பதிவேற்றம் செய்த பின்னர் தான் கடவுச்சீட்டை 03 நாட்களிலா அல்லது சாதாரண முறைப்படி 02 வாரங்களுக்குள்ளேயோ பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட வேண்டும்.

உரிய கொடுப்பனவு

மூன்று நாட்களில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் | Apply For Passport Online Immigration Govt Sl

இந்தச் செயல்முறைக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அருகிலுள்ள பிரதேச செயலாளர் அலுவலகத்திற்குச் சென்று, தங்கள் கைவிரல் அடையாளத்தை வழங்கி நிகழ்நிலை முறையின் மூலம் இலங்கை வங்கிக் கணக்கில் உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

எவருக்கேனும் வீட்டில் இது தொடர்பான செயற்முறையை செய்ய முடியாதபட்சத்தில், அவர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட நிலையத்திற்குச் சென்று இச்செயல்முறைகளை செய்து கொள்ளலாம்.

பிரதேச செயலகத்திற்குச் சென்று கைவிரல் அடையாளத்தை வழங்கிய பின்னர், எவருக்கேனும் உரிய கொடுப்பனவுகளை இணையத்தில் செலுத்த முடியாவிட்டால் அதற்கான மாற்று வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கைவிரல் அடையாளத்தை வழங்கிய பின்னர் பிரதேச செயலகத்தினால் ஒரு இலக்கம் வழங்கப்படும். அந்த இலக்கத்தை இலங்கை வங்கியில் சமர்ப்பித்தால், அதற்கான தொகையை இலங்கை வங்கி எமது திணைக்களத்திற்கு பெற்றுக்கொடுக்கும்.

நவீன தொழில்நுட்பம்

மூன்று நாட்களில் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும்: குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் | Apply For Passport Online Immigration Govt Sl

ஏற்கனவே 50 பிரதேச செயலகங்களில் கைவிரல் அடையாளத்தை பதியும் இயந்திரங்கள் மற்றும் ஒளிப்பட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதுடன், தபால் திணைக்களம் இந்த நடவடிக்கைகளுக்காக புதிய தபால் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தபால் முறையில் கடவுச்சீட்டை வீட்டிற்கு அனுப்பிவைத்தல் தொடர்பாக தபால் திணைக்களத்துடன் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த முறையின் படி 03 நாட்களில் கடவுச்சீட்டை உங்கள் வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடியும்.

கொழும்பு நகருக்குள் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு 02 நாட்களுக்குள் கடவுச்சீட்டை வீடுகளுக்கு கையளிக்க முடியும் என தபால் திணைக்களம் எமக்கு அறிவித்துள்ளது.

ஏனைய பிரதேச விண்ணப்பதாரர்கள் 03 நாட்களில் கடவுச்சீட்டை அவர்களது வீட்டிற்கே பெற்றுக் கொள்வார்கள். இதன்போது நிகழும் முறைகேடுகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை இச்செயல்முறைக்கு அதிகபட்சமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ReeCha
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016