மூவாயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தாதியர் நியமனங்கள்
இலங்கையின் தாதியர் சேவையில் புதிதாக சேர்க்கப்பட்ட 3,147 பேருக்கு நியமனக் கடிதங்கள் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
அலரி மாளிகையில் வைத்து நாளை (24) குறித்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தாதியர் சேவைக்காக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள 3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் நாளை வழங்கப்படவுள்ளன.
பதவி உயர்வு
அத்துடன் தாதியர் சேவையில் 79 விசேட தர உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான தாதியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும், என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சி பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தலைமையில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவின் (Nalinda Jayatissa) பங்கேற்புடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
