சவேந்திர சில்வாவிற்கு புதிய பதவி! புதிய இராணுவ தளபதியும் நியமனம் (படங்கள்)
Shavendra Silva
Sri Lanka Army
Gotabaya Rajapaksa
By Kanna
பாதுகாப்புப் படைகளின் பிரதானி
பாதுகாப்புப் படைகளின் பிரதானியாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, நாளை அவர் தனது கடமைகளை பொறுப்பேற்பார் என அரச தலைவர் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
புதிய இராணுவ தளபதி
இதேவேளை இலங்கையின் 24வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.
இதன்படி, லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று நாளை புதன்கிழமை அவர் தனது புதிய பதவியை பொறுப்பேற்கிறார்.
