அரச ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் பெருந்தொகை ஓய்வூதியம்
அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை எண் 44/90 இன் கீழ் ஓய்வு பெற்றர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 90% ஓய்வூதியம், சுற்றறிக்கை விதிகளின்படி இருபது ஆண்டுகளாகப் வழங்கப்படவில்லை என்று ஓய்வூதியதாரர்கள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
1991.01.01 முதல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஒரு குழுவினர் 2004 முதல் இந்தப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அமைப்பின் நிர்வாகச் செயலாளர் டி. லக்ஷ்மன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
06/2004, 2/2006, 16/2015, 14/2019(i) ஆகிய சுற்றறிக்கைகளின் கீழ் ஓய்வூதியத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஓய்வூதிய வீதங்கள் இந்த ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய உரிமையை 80% ஆகக் குறைத்துள்ளதாக நிர்வாகச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றறிக்கை விதிமுறைகள்
18.10.1990 திகதியிட்ட அரசாங்க நிர்வாக சுற்றறிக்கை எண் 44/90 இன் கீழ், இந்த ஓய்வூதியதாரர்கள் 1.1.1991 முதல் 31.12.2003 வரை தங்கள் சம்பளத்தில் 90% பெற உரிமை பெற்றுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்து வருட சேவையை முடித்த ஆனால் இருபது வருட சேவையை முடிக்காத ஓய்வூதியதாரர்கள் சுற்றறிக்கை விதிமுறைகளின்படி தங்கள் கடைசி மாத சம்பளத்தில் 90% பெற உரிமை பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அநுர அரசுக்கும் கடிதம்
இந்தப் பிரச்சினை தொடர்பாக 2004 முதல் ஒவ்வொரு அரசாங்கத்தின் பொறுப்பான அதிகாரிகளுக்கும் 120 க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த நேர்மறையான பதிலும் கிடைக்கவில்லை எனவும் லக்ஷ்மன் பீரிஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு 2025.04.19 அன்றும், அரசாங்க நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு 2025.04.26 அன்றும் கடிதங்கள் அனுப்பப்பட்டதாக நிர்வாகச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
