ரணிலை சந்தித்த அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி! எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களுடன் இரகசிய பேச்சு
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளமை அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளான சாகல ரத்நாயக்க, ஹர்ஷா டி சில்வாவ, மற்றும் கபீர் ஹாஷிம் இணைந்திருந்தமை இங்கு கவனிக்கதக்கதாக மாறியுள்ளது.
இந்த சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றதாகவும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜூலி சாங், ரணிலுக்கும், சாகல ரத்நாயக்கவுக்கும், ஹர்ஷா டி சில்வாவுக்கும், கபீர் ஹாஷிமுக்கும் இரவு உணவு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
எதிர்க்கட்சி தரப்பு
தற்போது எதிர்க்கட்சி தரப்புக்குள் பிளவு நிலை ஏற்பட்டுள்ளதாக சில வாதங்கள் வலுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிக்கதாய் மாறியுள்ளது. இந்த பின்னணியில் கபீரோ அல்லது ஹர்ஷாவோ, தங்கள் கட்சித் தலைவர் சஜித்துக்கு, அமெரிக்கத் தூதரை சந்திக்கும் விடயத்தை வெளிப்படத்தவில்லை என கூறப்படுகிறது.
கட்சி தலைமை குறித்த விடயத்தில் சஜித்துக்கு எதிராக பல எதிர்ப்புகள் கடந்த காலங்களில் வலுப்பெற்றிருந்தது. இது பலமுறை கபீர் மற்றும் ஹர்ஷவால் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
மறுபுறம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருந்து ரணிலுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இருக்கும் சில ஐ.தே.க. மூத்த உறுப்பினர்கள், ரணிலை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்து சஜித்தின் தலைமையில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அரசியல் இலக்கு
ஆனால், அவ்வாறு செய்தால், தனது அரசியல் இலக்குகள் எதையும் அடைய முடியாது என்பதை ரணிலுக்குள்ள தற்போதைய கேள்வி. மேலும், ருவான் விஜேவர்தன மற்றும், சாகலவுக்கு கட்சிக்குள் உயர் பதவியை வழங்க ரணில் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
கூடுதலாக, இந்த நடவடிக்கையின்படி ரணில மீண்டும் நாடாளுமன்றிற்கு வரகூடும் என நம்பப்படுகிறது. அதன்படி, தேசியப் பட்டியலில் ரணிலை மீண்டும் நாடாளுமன்றத்தில் அமர்த்த திட்டமிடல்கள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகிறது.
ரணில் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வர வேண்டுமானால், கடந்த தேர்தலில் போட்டியிட்ட சிலிண்டர் தொகுதியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி விலக வேண்டும்.
தற்போது, சிலிண்டருக்கு 2 தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிகள் உள்ளன, மேலும் ரவி கருணாநாயக்கவும் பைசர் முஸ்தபாவும். ரணில் நாடாளுமன்றத்தில் நுழைய வேண்டுமென்றால், ரவி அல்லது பைசர் நாடாளுமன்றத்தில் இருந்து பதவி விலக செய்ய வேண்டும்.
அதற்காகவும், ரணில் ஏற்கனவே ஒரு நடவடிக்கையைத் தொடங்கிவிட்டதாகவும், ரவி கருணாநாயக்கவுக்கு நாட்டில் உள்ள தனது நட்புறவு கொண்ட பல வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் சில சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
