ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் தொடர்ந்தும் இழுபறி நிலையில்
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “2024 பொதுத் தேர்தலின்படி, ஐக்கிய மக்கள் சக்தி 05 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றுள்ளது.
ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்
அவற்றில் ஒன்றுக்கு அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார (Ranjith Madduma Bandara) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இறுதித் தீர்மானத்துக்கான திகதியை இன்னும் அறிவிக்க முடியாது, எனினும் கூடிய விரைவில் இறுதித் தீர்மானம் எட்டப்படவேண்டும்.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகள் மட்டுமல்ல சுயேட்சையாக தற்போதும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.” என தெரிவித்தார்.
இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் (NDF) எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் தொடர்பாகவும் இறுதி முடிவு எடுக்கப்படாமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
