புதிய வாகனம் வாங்க சபாநாயகரும் பச்சைக்கொடி
தாங்கள் பயன்படுத்தும் வாகனம் 15 வருடங்கள் பழமையானது என்பதால் அதனை சீர் செய்ய 268 இலட்சம் ரூபா தேவை என பெரும் நிறுவனம் ஒன்று கணித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன(Mahinda Yapa Abeywardena) தெரிவித்தார்.
இந்த நிலைமையை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வரியில்லா வாகனங்களை வழங்குவது பொருத்தமானது எனவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில்
எவ்வாறாயினும், இது தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது வாகனத்தை மேம்படுத்துவதை விட புதிய வாகனம் ஒன்றை பெற்றுக்கொள்வதே சிறந்தது என தாம் உணர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்து வருடங்களுக்கு மேல் எந்த வாகனத்தையும்
பத்து வருடங்களுக்கு மேல் எந்த வாகனத்தையும் பயன்படுத்த முடியாது என தெரிவித்த சபாநாயகர், தற்போது தனியார் வாகனம் மற்றும் பழைய வாகனத்தையே தனது பயணத்திற்கு பயன்படுத்துவதாக தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |