அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அரபிக் கடல் பகுதிகளுக்கு கடற்படையினர் மற்றும் மீனவர்களை செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுமெனவும் மீனவர்கள் மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை
இதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி (kandy) மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |